Advertisment

என்ன முட்டாள்தனமான புகார் இது..? கடுப்பான பிரியங்கா காந்தி...

ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வைத்துள்ளார் என பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பினார். ராகுலுக்கு இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமை உள்ளதாக புகார் கூறினார். இதனையடுத்து இது தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.

Advertisment

priyanka gandhi lashes out at rahul gandhi dual citizenship issue

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த விவகாரம் தேசிய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது மோடியின் கட்டுக்கதை என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுர்ஜீவாலா தெரிவித்தார். ஆனால் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இது ஒரு பெரிய விஷயமல்ல. இது சாதாரணமாக இருக்கும் நடைமுறை தான்" என கூறியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இது பற்றி செய்தியாளர்கள் பிரியங்கா காந்தியிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு பதிலளித்த அவர், "ராகுல் இந்தியன் என்பது எல்லாருக்கும் தெரியும். ராகுல் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் என்பதும் எல்லாருக்கும் தெரியும். என்ன முட்டாள்தனமான புகார் இது" என கேட்டு தனது வாகனத்தில் ஏறி சென்றார்.

loksabha election2019 priyanka gandhi Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe