மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த வகையில் கடைசி கட்ட தேர்தல் நடக்கவுள்ள மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தொண்டர்களுக்கும் பிரியங்கா காந்திக்கும் இடையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அப்போது பிரியங்கா காந்தியை பார்த்து ஆரவாரம் செய்த தொண்டர்களின் அருகில் சென்ற அவர் ஃசெல்பி எடுத்துக்கொண்டார். மேலும் அங்கிருந்த தடுப்பு மேல் ஏறி தொண்டர்கள் இருக்கும் பக்கம் சென்று அவர்களுடன் பேசினார். அவர் இப்படி செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.
அதுபோல பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் தனக்கு எதிராக முழக்கமிட்டவர்களை காரிலிருந்து இறங்கி சென்று சந்தித்து அவர்களுடன் கை குலுக்கினார். காரிலிருந்து இறங்கிய அவர் கோஷமிட்டவர்களுக்கு கை கொடுத்துவிட்டு சிரித்து பேசிவிட்டு சென்றார். இதனால் அங்கு கோஷமிட்டு கொண்டிருந்தவர்கள் என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போய் நின்றனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.