Advertisment

ராகுல் காந்தியுடன் மோதலா? - பிரியங்கா காந்தி விளக்கம்!

rahul - priyanka

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இத்தேர்தலுக்கான இறுதிக் கட்ட பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன.

Advertisment

இந்தநிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரியங்கா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் காங்கிரஸை வீழ்த்தும் எனத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தனக்கும் தனது சகோதரருக்கும் இடையே எந்தவித மோதலுமில்லை என தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பிரியங்கா காந்தி, என் சகோதரனுக்காக நான் உயிரையும் கொடுப்பேன். அவர் எனக்காக உயிரைக் கொடுப்பார். எங்களுக்கிடையே எங்கே மோதல் இருக்கிறது? பிரச்சனை யோகியின் மனதில்தான் உள்ளது. அவருக்கும், மோடி மற்றும் அமித்ஷாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக அவர் இவ்வாறு கூறுவதாகத் தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe