
சமீபத்தில் ராகுல் காந்தியின் தங்கையான பிரியங்கா காந்தி உபி மாநிலம் கிழக்கு பகுதி தலைமை செயலாளராகினார். அதனை அடுத்து நேற்று லக்னோவில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
இந்நிலையில் இன்று நில மோசடி வழக்கு விசாரணைக்காக ஜெய்ப்பூர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார். சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறை டெல்லியில் வதேராவை விசாரித்தது. ராபர்ட் வதேராவுடன் அவரது தாயார் மவூரினும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். இவர்களுடன் பிரியங்கா காந்தியும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் பிரியங்கா காந்தி வாழ்க வாழ்க என கோஷமிட்டனர். மேலும் அந்த அலுவலக வாசலில் பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் இருப்பது போன்ற பேனரையும் வைத்திருந்தனர்.