Skip to main content

"ராமர் எல்லோரிடமும் இருக்கிறார்" - பிரியங்கா காந்தி கருத்து...

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

ddd

 

அயோத்தியில் நாளை ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் பிரியங்கா காந்தி. 

 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழலில், அதற்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, "எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம். ராமர் எல்லோரிடமும் இருக்கிறார்.

 

ராமர் மற்றும் சீதையின் அருள் உரை மற்றும் அருளால், ராம்லல்லா கோயிலின் பூமி பூஜை விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார ரீதியான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்னைப் பற்றியும், எனது குணத்தைப் பற்றியும்...” - பிரியங்கா காந்தி மீது பா.ஜ.க. எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
BJP MLA sensational allegation on Priyanka Gandhi

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்திக்கு எதிராக பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி சதர் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ அதிதி சிங். மறைந்த மூத்த அரசியல்வாதியான அகிலேஷ் சிங்கின் மகளான அதிதி சிங், கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதனையடுத்து, அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். அதன் பிறகு, ரேபரேலி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், அதிதி சிங் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “மக்களவைத் தேர்தலில் சீட் வேண்டுமென்றால், என்னை பற்றியும், எனது குணத்தை பற்றியும் தவறாகப் பேசும்படி என்னுடைய முன்னாள் கணவரிடம் பிரியங்கா காந்தி கூறியிருக்கிறார்” என்று கூறி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Next Story

“பெண்ணாக இருப்பது குற்றமாகிவிட்டது” - பிரியங்கா காந்தி தாக்கு

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
 Priyanka Gandhi criticized Uttarpradesh governmet and says Being a woman has become a crime

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவர் செங்கல் சூளை ஒன்று நடத்தி வருகிறார். இந்த சூளையில், 2 சிறுமிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உட்படப் பலர் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் இரண்டு சிறுமிகளும் வயல்வெளிக்குச் சென்றுள்ளனர். மாலை சென்ற இவர்கள் இரவு வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவர்களது குடும்பத்தினர், வெளியே சென்று தேடி வந்துள்ளனர். அப்போது, அருகே உள்ள மரம் ஒன்றில் 2 சிறுமிகளின் உடல்கள் தூக்குப் போட்ட நிலையில் இருந்தன.

இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள், இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், 2 சிறுமிகளின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், செங்கல் சூளை நடத்தி வரும் தொழிலதிபரின் 18 வயது மகன் மற்றும் அவருடைய 19 வயது மருமகன் இருவரும் சேர்ந்து, அந்த 2 சிறுமிகளுக்கு கட்டாயப்படுத்தி மதுபானம் கொடுத்துள்ளனர். இதில் மயக்கமடைந்த சிறுமிகளை, இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர், இதனை தங்கள் செல்போன் மூலம் வீடியோவாகவும் எடுத்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் தொழிலதிபர் மற்றும் அந்த இளைஞர்கள் 2 பேர் என 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், செங்கல் சூளை தொழிலதிபர் ராம்ரூப் நிஷாத் (48), அவரது மகன் ராஜு (18), மருமகன் சஞ்சய் (19)  ஆகியோர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்தது. மேலும், அவர்களின் செல்போனில் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு சிறுமிகள் தூக்குப்போட்டு இறந்த நிலையில், அவர்களில் ஒருவரின் தந்தையின் உடலைத் தூக்குப் போட்ட நிலையில் போலீசார் மீட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்ட அடுத்த ஒரு வாரத்திற்குள் அவரது தந்தை மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘கான்பூரில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டனர். தற்போது அந்த சிறுமிகளின் தந்தை ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் சமரசம் செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளும், பெண்களும் நீதி கேட்டால், அவர்களது குடும்பங்களை அழிக்கும் விதியாகிவிட்டது. உன்னாவ், ஹத்ராஸ் முதல் கான்பூர் வரை எங்கு பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டாலும், அவர்களது குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன. சட்டம் என்று எதுவும் இல்லாத இந்தக் காட்டில் பெண்ணாக இருப்பது குற்றமாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, மாநிலத்தின் கோடிக்கணக்கான பெண்கள் என்ன செய்ய வேண்டும், அவர்கள் எங்கு செல்ல வேண்டும்?” என்று பதிவிட்டுள்ளார்.