காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளாவின் வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று காலை விமானம் மூலம் கோழிக்கோடு வந்த ராகுல் காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடு சென்றார். அதன்பின் தொண்டர்களுடன் பேரணியாக சென்று ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். வேம்புமனு தாக்கல் செய்யும் போது அவருடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடன் வந்திருந்தார்.

Advertisment

priyanka gandhi about rahul gandhi

இந்நிலையில் ராகுல் வயநாடு தொகுதியில் வேம்புமனு தாக்கல் செத்தது குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில், "என் அண்ணன், என்னுடைய நம்பிக்கைக்குரிய தோழன், எல்லாவற்றையும் விட மிகுந்த தைரியமானவர். வயநாடு அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளட்டும். அவர் எப்போதும் உங்களை கைவிட மாட்டார்" என கூறியுள்ளார்.