பிரியங்கா செய்தது அவமரியாதை- ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு...

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

priyanka

இந்நிலையில் உத்தரபிரதேச மாநில கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாகராஜ் நகரின் சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கி 3 நாள் 140 கிலோமீட்டர் தூரம் படகில் பயணித்து அங்குள்ள கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது ராம்நகரிலுள்ள சாஸ்திரி சவுக் பகுதியில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் பிரியங்கா மரியாதை செலுத்தினார். அப்போது அவர் தனது கழுத்தில் அணிந்திருந்த மாலையை எடுத்து சாஸ்திரி சிலைக்கு அணிவித்தார் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பாஜக வினர் அந்த மீது கங்கை நீரை ஊற்றி அந்த சிலையை சுத்தம் செய்துள்ளனர்.

இது பற்றி தற்போது கருத்து கூறியுள்ள பாஜக வின் ஸ்மிருதி இரானி, "முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை பிரியங்கா அவமரியாதை செய்துள்ளார். தனது கழுத்தில் இருந்த மாலையை சாஸ்திரியின் சிலைக்கு தாது கைகளால் அவர் அணிவித்துள்ளார். இதன்மூலம் பிரியங்கா காந்தி மரியாதை செலுத்துவதாக கூறி அவரை அவமரியாதை செய்துள்ளார். இதிலிருந்தே காங்கிரஸ் கட்சியின் மதிப்பு என்ன என்பது தெரிகிறது" என அவர் விமர்சித்துள்ளார்.

congress loksabha election2019 priyanka gandhi
இதையும் படியுங்கள்
Subscribe