காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவின் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த பிரியங்கா சதுர்வேதி இன்று காலை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/priyanka-cong_0.jpg)
அதனை தொடர்ந்து இன்று மதியம் உத்தவ் தாக்ரே முன்னிலையில் அவர் சிவசேனாவின் இனைந்தார். இதுகுறித்து பேசிய பிரியங்கா, மிக நீண்ட முடிவுக்கு பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். பிரியங்கா சதூர்வேதியை வரவேற்று பேசிய சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே, “சிவசேனா தொண்டர்களுக்கு நல்ல சகோதரி கிடைத்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)