காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி அறிவித்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த பிரியங்கா தேர்தல் சமயத்தில் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு சிலர் இது காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நேரத்தில் பின்னடைவாகவே பார்க்கப்படும் என சமூகவலைதளங்களில் கருத்து கூறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் ஒரு சில நிர்வாகிகள் மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளித்திருந்தார் பிரியங்கா. இவரது புகாரை அடுத்து அந்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கிய காங்கிரஸ் தற்போது மீண்டும் அவர்களை கட்சியில் இணைத்ததால் பிரியங்கா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.