சிலநாட்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான 'ஒரு அடார் லவ்' என்ற படத்திலிருந்து வெளியான 'மாணிக்க மலராய'பாடலில்ஒரு காட்சியில் ப்ரியா வாரியர் என்ற இளம்நடிகை, தன் புருவத்தையும்கண்களையும்அசைத்து மௌன மொழியில் பேசுவார். ப்ரியா வாரியர் கண்அசைத்தது ஒரு பையனுக்குத்தான். ஆனால் அந்தக்கண் அசைவுஒட்டுமொத்த இந்திய இளைஞர்களின் மனதையும் கட்டிபோட்டுவிட்டது. சமூகவலைத்தளத்தில் ஒரு இரவில் பிரபலமானவர்கள் பட்டியலில்ப்ரியா வாரியர்இணைந்தார்.

Advertisment

Priya varrier - traffic police

நாட்களாகிவிட்டது, ஒரு வழியாகப்ரியா வாரியரின் தாக்கம் முடிந்தது என்று நினைத்தால் தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ளவதோதரா நகர் போலீசாரையும் அந்த கண்ணசைவு கவர்ந்துள்ளது. அவர்கள் சாலை விபத்துகளை தவிர்க்கப்ரியா வாரியர் கண்ணடிப்பது போன்ற படத்தைப்போட்டு, அதில் "விபத்துக்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடக்கும். எந்தவொரு கவனச் சிதறலும் இல்லாமல் கவனமாக வண்டி ஒட்டவும்" என்ற விளம்பரத்தை சிக்னல்களில் வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த விளம்பரத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.

Advertisment

Kolaveri ad

இதே போன்று தனுஷின் 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் வெளியான பொழுதும் இதே போன்ற விழிப்புணர்வு பலகையை வைத்திருந்தனர். சென்னை போக்குவரத்து காவல்துறை வைத்த அந்த பலகையில்'ஒய் திஸ் கொலவெறி? கோபப்படாமல் வாகனத்தை ஓட்டுங்கள்' என்ற வாசகம் இருந்தது. இந்தப்பலகையை டெல்லி மற்றும் பெங்களூரு போலீசாரும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.