Advertisment

கல்வித்துறையில் மற்றொரு சாதனை; தனியார் பள்ளியின் புதிய முயற்சி!

Private school's introduced AI teacher in kerala

Advertisment

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ)வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும்திறம்படவும் செய்து முடிக்கிறது.

இந்த செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனைப் போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடியும். இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் கணினிஉள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனைகளைக் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஆசிரியரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணிக்காக ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஒன்றுவடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஐரிஸ்’ (IRIS) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ ஆசிரியர், பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது.

3 மொழிகளில் பேசவும், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் திறன் கொண்ட இந்த ரோபோவின் கால்களுக்கு அடியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்கள் மூலம், ரோபோ ஆசிரியர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து செல்ல முடியும். இந்த ரோபோவை ‘மேக்கர்ஸ் லேப்’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kerala teacher
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe