ADVERTISEMENT

ஒன்றரை வருடம் சிறை... 20கோடி வரை அபராதம் - கிரிப்டோகரன்சி சட்டம் குறித்து அமைச்சரவை குறிப்பு கூறுவது என்ன?

09:52 AM Dec 03, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2018ஆம் ஆண்டில் கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் பயன்பாட்டைத் தடை செய்யும் வகையில் ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவை, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் இரத்து செய்தது. அதன்தொடர்ச்சியாக பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளில் இந்தியர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்தநிலையில், கிரிப்டோகரன்சிகள் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் என அஞ்சப்படுவதால், இந்தக் கிரிப்டோகரன்சி மீது மத்திய அரசு சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றவுள்ளது. இந்த சட்ட மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் புதிய சட்டத்தின் மூலம் தனியார் கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில், மத்திய அரசு பகிர்ந்துள்ள அமைச்சரவை குறிப்பின்படி, தனியார் கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை விதிக்காமல், அதனை ஒழுங்குமுறைப்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதேபோல் கிரிப்டோகரன்சியை இந்தியாவில் ஒரு நாணயமாக அங்கீகரிக்கப்போவதில்லை எனவும் அந்த அமைச்சரவை குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சரவை குறிப்பின்படி, கிரிப்டோகரன்சியை கிரிப்டோ சொத்து என புதிய சட்டம் குறிப்பிடுகிறது. இந்தப் புதிய சட்டத்தின் விதிகளை மீறி கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை செய்தால், ஒன்றரை வருடம் வரை தண்டனையும், 20 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அந்த அமைச்சரவை குறிப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT