
கேரளாவில்,கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து ஒன்றுஇருசக்கரவாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளாகும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பரபரப்பாக சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது வாகனத்தின் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த காட்சியில் தனியார் பேருந்தின் முன் புறமாக மூவர் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது இரு சக்கர வாகனத்திற்கு முன்பு சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென பிரேக் பிடித்து நின்றது. ஆனால் வேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனங்களின் மீது பலமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்றமூன்று பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த ஐந்து பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பேருந்துக்கும் முன்புறமாகச் சென்ற அந்த வாகனத்தில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.
Follow Us