Advertisment

சிறையாக மாறிய அரசு ஹோட்டல் – எழுதிக்கொடுத்து விடுதலையாகும் தலைவர்கள்!

ஹூரியத் தலைவர்களில் ஒருவரான மிர்வைஸ் உமர் பரூக் உள்ளிட்ட ஐந்து தலைவர்கள் தங்களுடைய அரசியல் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக உறுதி அளித்ததால், விடுதலை செய்யப்பட்டதாக அரசு காஷ்மீர் அரசு அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

Advertisment

 Leaders

கடந்த 5 ஆம் தேதி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து விலக்கப்பட்டபிறகு ஸ்ரீநகரில் உள்ள அரசு ஹோட்டல் சிறையாக மாற்றப்பட்டது. அன்றுமுதல் சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். ஆனால், இப்போது வெறும் ஆயிரம் பேர் மட்டுமே அடைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். பல்வேறு அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய அரசியல் நடவடிக்கைகளை கைவிடுவதாக உறுதி அளித்து கையெழுத்துப் போடுகிறார்கள். அப்படி கையெழுத்துப் போடுகிறவர்கள் விடுவிக்கப்படுகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே காஷ்மீரின் பல பகுதிகளில் தொடர்ந்து கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டே இருக்கின்றன. இதுதொடர்பாக பேசிய வர்த்தகர்கள் சிலர், “எங்களை யாரும் மிரட்டவில்லை. நாங்கள்தான் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கடைகளை அடைத்திருக்கிறோம்” என்றனர்.

Advertisment

ஆனால், காஷ்மீரில் தடைகளை விலக்கிக் கொள்ளவும், பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்டு இணைப்புகளை ஒரு வாரத்தில் இயக்க அனுமதி கொடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

hotel leaders Prison released
இதையும் படியுங்கள்
Subscribe