Advertisment

'தண்ணீர் தட்டுப்பாடு' 108 மாணவிகளுக்கு மொட்டை போட்ட தலைமையாசிரியர்!

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 400க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவிகள் தங்கும் வசதியும் உண்டு. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அப்பகுதியில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. ஆழ் குழாய் கிண்று வறண்டதால் 3 நாட்களுக்கு ஒரு முறை லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும், அங்கு பயிலும் மாணவிகள் விடுதியில் குளிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் பள்ளி நிர்வாகம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

f

இந்நிலையில் மாணவிகளின் தலைமுடி நீளமாக இருப்பதால்தான் குளிப்பதற்கு அதிகமாக தண்ணீர் செல்வாவதாக கூறி, அங்கு தங்கி பயின்ற 108 மாணவிகளின் தலை முடியை கைக்கு வந்தவாறு வெட்டி உள்ளார். இந்நிலையில், மாணவிகளை பார்க்க வந்த பெற்றோர்கள், தங்களுடைய மகளின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அந்த மாணவிகளின் பெற்றோர்கள், தலைமை ஆசிரியருக்கு எதிராக பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

hair cut
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe