Advertisment

பிரதமரின் கோரிக்கையும் ... மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட தகவலும்

The Prime Minister's request and the information released by the Union Ministry of Culture!

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் 13ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை தேசியக் கொடிகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். மேலும் வீடுகளில் ஏற்றப்படும் தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து Har Ghar Tiranga என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், மக்கள் என பல தரப்பிலிருந்து பலரும் தேசியக் கொடியை ஏற்றி செல்ஃபி எடுத்து பதிவேற்றி இருந்தனர். நடிகர் அமிதாப்பச்சன், நடிகர் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்பட பிரபலங்கள் பலரும், பொதுமக்கள் பலரும் செல்ஃபி எடுத்து பதிவேற்றம் செய்திருந்தனர்.

Advertisment

The Prime Minister's request and the information released by the Union Ministry of Culture!

இந்நிலையில் மொத்தம் 6 கோடி பேர் தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது ஒரு பிரம்மாண்ட சாதனை என்று அறிவித்துள்ள மத்திய கலாச்சார அமைச்சகம் செல்ஃபி எடுத்து பதிவேற்றம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe