அண்ணல் அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாள் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவர்களும் அரசு உயரதிகாரிகளும் மக்களும் அவரது சிலைக்கும் உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட புத்த குருமார்களுக்கும் மரியாதைசெலுத்தப்பட்டது.
இவ்விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.