prime minister office fake officer incident in srinagar 

Advertisment

பிரதமர் அலுவலகத்தில் உயரதிகாரியாகப் பணிபுரிவதாகக் கூறி காஷ்மீரில்உள்ள பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்புடன் சுற்றி வந்தவர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் தற்போது பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தை சேர்ந்தவர் கிரண் படேல். இவர் சமீபத்தில் காஷ்மீரில் தலைநகர் ஸ்ரீநகருக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினரிடம் தான்பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் பிரச்சாரம் மற்றும் வியூக துறையில்கூடுதல் இயக்குநராக பணியாற்றுவதாகக் கூறியுள்ளார். வெளிநாடுகளில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளதாகவும், டெல்லியில்முக்கிய அரசியல் தலைவர்களுடன் தனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குண்டு துளைக்காத சகல வசதிகளுடன் கூடிய காரும் இவருக்கு வழங்கப்பட்டன. இதன் மூலம் ஸ்ரீநகரில் உள்ள முக்கிய சுற்றுலாதளங்களை சுற்றி பார்த்து வந்துள்ளார்.

Advertisment

இருப்பினும் கிரேன் படேல் மீது அங்கு இருந்த போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் முறையாக விசாரணை செய்தபோது தங்களை மோசடியாக ஏமாற்றியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.