Skip to main content

மோசடி ஆசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கிய ராணுவப்படையினர்

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

 prime minister office fake officer incident in srinagar 

 

பிரதமர் அலுவலகத்தில் உயரதிகாரியாகப் பணிபுரிவதாகக் கூறி காஷ்மீரில் உள்ள பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்புடன் சுற்றி வந்தவர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

குஜராத்தை சேர்ந்தவர் கிரண் படேல். இவர் சமீபத்தில் காஷ்மீரில் தலைநகர் ஸ்ரீநகருக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினரிடம் தான் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் பிரச்சாரம் மற்றும் வியூக துறையில் கூடுதல் இயக்குநராக பணியாற்றுவதாகக் கூறியுள்ளார். வெளிநாடுகளில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளதாகவும், டெல்லியில் முக்கிய அரசியல் தலைவர்களுடன் தனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குண்டு துளைக்காத சகல வசதிகளுடன் கூடிய காரும் இவருக்கு வழங்கப்பட்டன. இதன் மூலம் ஸ்ரீநகரில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை சுற்றி பார்த்து வந்துள்ளார்.

 

இருப்பினும் கிரேன் படேல் மீது அங்கு இருந்த போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் முறையாக விசாரணை செய்தபோது தங்களை மோசடியாக ஏமாற்றியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“பிரதமரின் அலுவலகம் மக்களின் அலுவலகமாக இருக்க வேண்டும்” - மோடி பேச்சு!

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
"The office of the Prime Minister should be the office of the people" - Modi speech

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு அவர் அளித்த முதல் உரையில், “அரசாங்கம் என்று வரும்போது, ​​மோடி மட்டும் அல்ல, ஆயிரக்கணக்கான மனங்களும் அவருடன் இணைந்துள்ளன. இதில் ஆயிரக்கணக்கானவர்களின் மூளைகள், ஆயிரமாயிரம் கரங்கள் உழைக்கின்றன. இந்த மாபெரும் வடிவத்தின் விளைவாக, சாமானியனும் கூட அதன் திறன்களை அடைய முடிகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் இருந்த பிம்பம் என்னவென்றால், பிரதமரின் அலுவலகம் (PMO) ஒரு சக்தி மையம், மிகப் பெரிய சக்தி மையமாக இருந்தது. நான் அதிகாரத்திற்காகப் பிறக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு முதல் நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள், அதிகார மையமாக மாற வேண்டும் என்பது எனது விருப்பமோ அல்லது எனது பாதையோ அல்ல. பிரதமரின் அலுவலகம் என்பது மக்களின் அலுவலகமாக இருக்க வேண்டும். அது மோடியின் அலுவலகமாக இருக்க கூடாது. நாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரே ஒரு இலக்கை கொண்டு செயல்பட வேண்டும். முதலில் தேசம் ஆகும். ஒரே ஒரு நோக்கம் அதாவது 2047 இல் வளர்ச்சியைடந்த பாரதம் (விக்சித் பாரத்). 

"The office of the Prime Minister should be the office of the people" - Modi speech

இந்த நேரத்தில் பதவி தொடங்கி இந்த நேரத்தில் முடிவடையும் நபர்கள் நாங்கள் அல்ல. நாங்கள் காலத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நமது சிந்தனைக்கு வரம்புகள் இல்லை. நமது முயற்சிகளுக்கு எந்த அளவுகோலும் இல்லை. 10 ஆண்டுகளில் நான் நினைத்ததை விட அதிகமாகச் சிந்திப்பதும், அதைவிட அதிகமாகச் செய்வதும் இப்போது எனது கடமை என்று நினைக்கிறேன். இதனை நான் 10 வருடங்களில் செய்தேன். இப்போது செய்ய வேண்டியது என்னவெனில், நாம் நேற்று என்னவாக இருந்தோம், இன்று எவ்வளவு நன்றாகச் செய்தோம் என்ற இலக்கை நோக்கிச் செய்ய வேண்டும். வேறு யாரும் அடையாத இடத்திற்கு நம் நாட்டை நாங்கள் கொண்டு செல்ல வேண்டும்” எனப் பேசினார். 

Next Story

போலீசுக்கே விபூதி; ரா அதிகாரி என மிரட்டிய போலி அதிகாரி கைது 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Vibhuti to the police; Fake officer who threatened to be RAW officer arrested

கடலூர் மாவட்ட  காவல்துறையினர் மற்றும் சில பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இந்த அழைப்பில் பேசியவர் ரா உளவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி என்றும் டெல்லியில் இருந்து வந்திருப்பதாகவும், சிதம்பரத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகரின் மகனை கைது செய்ய வந்துள்ளதாகவும், இதற்கு தேவையான நடவடிக்கையை  எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல கேள்விகளை காவல் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தெளிவாக பதிலை கூறியுள்ளார். இந்த தகவல் உண்மை என நம்பிய காவல்துறை  அதிகாரிகள். கைது நடவடிக்கைக்கு தேவையான காவலர்களை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை இருக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிதம்பரம் நகர காவல்துறையினர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய முறையில் திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் ரா அதிகாரி என்று கூறி மிரட்டியுள்ளார். காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பரங்கிப்பேட்டை ஆற்றங்கரையை தெருவைச் சேர்ந்த நீல ஒளி மகன் சிவசுப்பிரமணியன் ( 35)  எனவும் இவர் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து பட்டய படிப்பு முடித்துள்ளதாகவும், இவர் மும்பை பகுதியில் பணியில் இருந்த போது போதை பொருட்களுக்கு அடிமையாகி செங்கல்பட்டு போதை  மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பகுதியில் உள்ள எம்எல்ஏ ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதற்காக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலையானவர் என்றும் தெரியவந்தது.

புதன்கிழமை இரவு சிதம்பரம் நகர போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனால் மாவட்ட காவல்துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.