Prime Minister Narendra Modi's trip to Chennai!

Advertisment

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகின்ற மே 26- ஆம் தேதி அன்று சென்னை வரவிருக்கும் நிலையில், அவரது பயணத் திட்டம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

வரும் மே 26- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.55 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, சென்னைக்கு புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் மாலை 05.10 மணிக்கு வந்து இறங்குகிறார். அங்கு அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐஎன்எஸ் அடையாறுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைகிறார். பின்னர், சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் பெரியமேடு ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாலை 05.45 மணிக்கு வருகிறார்.

Advertisment

பயணத்தின் இடையில் பா.ஜ.க.வினர் சார்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாலை 05.45 மணிக்கு வரும் பிரதமர், இரவு 07.00 மணி வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மீண்டும் அங்கிருந்து இரவு 07.05 மணிக்கு புறப்பட்டு, இரவு 07.35 மணிக்கு சென்னை விமான நிலையத்தைச் சென்றடைகிறார்.

பின்னர், அங்கிருந்து இரவு 07.40 மணிக்கு இந்திய விமானப் படை ஐ.ஏ.எப். பிபிஜே விமானத்தில் புறப்பட்டு டெல்லிக்கு இரவு 10.25 மணிக்கு செல்கிறார்.