Skip to main content

முன்னாள் பிரதமரை கைப்பிடித்து அழைத்து வந்த பிரதமர் நரேந்திர மோடி! (படங்கள்)

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான சூழ்நிலையில் நேற்று (29/11/2021) தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர் அமளி காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டுவருகிறது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அலுவல்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

 

இந்தச் சூழலில் இன்று (30/11/2021) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்திற்குச் சென்ற மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடாவை, பிரதமர் நரேந்திர மோடி கையைப் பிடித்து தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அத்துடன் அவரை இருக்கையில் அமர வைத்தார். பின்னர் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்தாலோசித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ம.ஜ.த மாநிலத் தலைவர் நீக்கம்; முன்னாள் பிரதமர் தேவகவுடா அதிரடி முடிவு

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

DeveGowda Decided Removal of MJP State President in karnataka

 

கர்நாடகா மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.  காங்கிரஸின் இந்த வெற்றி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, பா.ஜ.கவுடன் இணையப் போவதாக அடிக்கடி தகவல்கள் வந்து கொண்டிருந்தன. 

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளன. கூட்டணி குறித்து விவாதிக்க முன்னாள் பிரதமர் தேவகவுடா செப்டம்பர் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்துப் பேசினார். ஜனதா தள கட்சிக்கு 4 நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி மற்ற 24 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடும்” என்று கூட்டணியை உறுதி செய்தார். 

 

இந்த நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது என்பது கட்சியின் முடிவல்ல என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடகா மாநிலத் தலைவர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இப்ராஹிம், “பா.ஜ.க.வுடன் ஜனதா தளம் கூட்டணி வைப்பது என்பது கட்சியின் முடிவல்ல. குமாரசாமியின் தனிப்பட்ட முடிவு. உடல்நிலை சரியில்லாத அவரது தந்தை தேவுகவுடாவை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்குமாறு குமாரசாமி கட்டாயப்படுத்தியுள்ளார். நான்தான் ஜனதா தளம் கட்சியின் கர்நாடகா மாநிலத் தலைவர். பா.ஜ.க.வைத் தவிர யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நாங்கள் தான் முடிவு செய்வோம்” என்று கூறியிருந்தார். இது கர்நாடகா அரசியலில் மட்டுமல்ல, ம.ஜ.கவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்நிலையில், ம.ஜ.க கர்நாடகா மாநிலத் தலைவர் பதவியில் இருந்து இப்ராஹிம் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா வெளியிட்டுள்ளார். இதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேவுகவுடா, ஜனதா தளம் கட்சியின் தற்காலிக மாநிலத் தலைவராக முன்னாள் முதல்வர் குமாரசாமி செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

பிப்ரவரி 14; “இந்தியா என்றும் மறக்காது” - பிரதமர் மோடி 

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

pm modi  tweet about Pulwama incident

 

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரைத் தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்கமாட்டோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்வோம். அவர்களின் உன்னத தியாகத்தை என்றும் இந்தியா மறக்காது. வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர்களின் தைரியம் நம்மை  ஊக்குவிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.