Skip to main content

அமெரிக்காவில் தரையிறங்கிய பிரதமர் மோடி... கொட்டும் மழையில் கோஷமிட்ட பொதுமக்கள்! (படங்கள்) 

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளியினரைச் சந்தித்துப் பேசினார்.

 

மூன்று அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாஷிங்டன் விமானப்படைத் தளத்தில், கொட்டும் மழையிலும் இந்திய வம்சாவளியினர் கோஷமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் உள்ளிட்டோரும் வரவேற்றனர். அப்போது, இந்திய வம்சாவளியினரைப் பிரதமர் சந்தித்துப் பேசினார். இது குறித்த புகைப்படங்களை அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவின் பலம் என்று குறிப்பிட்டார். 

 

அதைத் தொடர்ந்து, பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனையும் பிரதமர் சந்தித்துப் பேசவுள்ளார். அதைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியும், அமெரிக்காவின் துணை அதிபருமான கமலா ஹாரிஸையும் சந்தித்துப் பேசவுள்ளார். 

 

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளின் கூட்டமைப்பான 'குவாட்' கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதில் பிரதமர், அமெரிக்க அதிபர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர். 

 

 

 

சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டமாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உலக வங்கி தலைவராகும் இந்திய வம்சாவளி நபர்; போட்டியின்றி தேர்வு

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

ajaypal singh banga selected world bank chief from official announcement 

 

உலக வங்கியின் தற்போதைய தலைவராக இருந்து வருபவர் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் மால்பாஸ். இவர் வரும் ஜூன் மாதத்துடன் தனது பதவியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். அவரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா என்பவரின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் அஜய் பங்காவை தவிர வேறு யாரும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்காததால் இவர் போட்டியின்றித் தேர்வானதாக அதிகாரப்பூர்வமாக உலக வங்கி அறிவித்துள்ளது. மேலும் இவர் வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதியில் இருந்து அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு உலக வங்கியின் தலைவராக இருப்பார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தான் அஜய் பங்காவின் பூர்வீகம் ஆகும். இவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 1959 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை பொருளாதாரப் படிப்பும், அதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் பட்ட மேற்படிப்பும் முடித்துவிட்டு இந்தியாவில் சில ஆண்டுகள் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்குச் சென்ற இவர் சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

“இந்தியாவில் எந்தவித இடையூறுகளும் இஸ்லாமியர்களுக்கு இல்லை” - வாஷிங்டனில் நிர்மலா சீதாராமன் பேச்சு

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

nn

 

இந்தியாவில் சிறுபான்மையினர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில் இந்தியாவில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், மேற்கத்திய ஊடகங்கள் கள ஆய்வுகளை மேற்கொள்ளாமல் செய்திகளை வெளியிடுகின்றன.

 

இந்தியாவில் எந்த வித இடையூறுகளும் இன்றி இஸ்லாமியர்கள் இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவித்தொகை உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அண்டை நாடான பாகிஸ்தானில் மத சிறுபான்மையினர் படுகொலை செய்யப்படும் நிலையில் இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது என்றார்.