Skip to main content

பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர், குடியரசு தலைவர் நேரில் அஞ்சலி...

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

Prime Minister Narendra Modi pays last respects to PranabMukherjee

 

 

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர், குடியரசு தலைவர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

 

இந்தியாவின் 13 -ஆவது குடியரசு தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்த பிரணாப் முகர்ஜி கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. மேலும், சுவாசம் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில நாட்களாக ஆழ்ந்த கோமா நிலையில் இருந்துவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார். இதனைத்தொடர்ந்து, டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள பிரணாப் முகர்ஜி இல்லத்தில், அவரது புகைப்படத்திற்கு மலர் வளையம் வைத்து குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராணுவ மரியாதையுடன் பிரணாப் முகர்ஜி உடல் தகனம்...

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

pranab mukherjee's  last rites performed at Lodhi road crematorium

 

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 

 

இந்தியாவின் 13 -ஆவது குடியரசு தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்த பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. மேலும், சுவாசம் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில நாட்களாக ஆழ்ந்த கோமா நிலையில் இருந்துவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.

 

இதனைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அரசியல்கட்சி தலைவர்கள், உறவினர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது இல்லத்திலிருந்து லோதி சாலையில் உள்ள மயானத்திற்கு, முப்படைகளின் மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

 

 

Next Story

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு சச்சின், விராட் கோலி, ரோஹித் ஷர்மா இரங்கல்....

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

pranab mukherjee

 

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி நேற்று மரணமடைந்தார். அதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், தற்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் ஒருநாள் அணிக்கான துணை கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பிரணாப்முகர்ஜி அவர்களின் இறப்பு செய்தி வருத்தமளிக்கிறது. நம் தேசம் சிறந்த தலைவரை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

இந்திய அணியின் ஒருநாள் அணிக்கான துணை கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பிரணாப்முகர்ஜி அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவர் சிறந்த தலைவர். அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" எனப் பதிவிட்டுள்ளார்

 

இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு செய்தி கவலையளிக்கிறது. இந்தியாவிற்காக கடினமாக உழைத்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், அவரை நேசித்தவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.