Advertisment

தாயின் பாதங்களுக்கு பாத பூஜை செய்த பிரதமர் நரேந்திர மோடி! (படங்கள்) 

இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாககுஜராத்திற்கு வருகை புரிந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. நேற்று (17/06/2022) இரவு 09.00 மணியளவில் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரதமரை, குஜராத் மாநில முதலமைச்சர்பூபேந்திரபடேல்மற்றும் ஆளுநர்ஆச்சார்யதேவ்விராத்,மாநில அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர்.

Advertisment

அதைத் தொடர்ந்து, இன்று (18/06/2022) காலை 07.00 மணியளவில் காந்திநகரில் உள்ள தனது தாயார்இல்லத்திற்குச்சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது தாய்ஹீராபென்னின்100-வதுபிறந்தநாளையொட்டி, அவருக்கு மாலை அணிவித்து,பாதங்களுக்குப்பாத பூஜை செய்து வாழ்த்துப் பெற்றார். பின்னர், அவரது காலில் விழுந்தும்ஆசிபெற்றார். அத்துடன், வீட்டில் உள்ள பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபட்டார்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, இன்று காலை 11.00 மணியளவில் வதோதரா மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியில்கலந்துகொள்ளும் பிரதமர், சுமார் 21,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களைத்தொடங்கி வைத்து உரையாற்றவிருக்கிறார்.

Gujarath GANDHI NAGAR PM NARENDRA MODI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe