ADVERTISEMENT

அத்வானிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி (படங்கள்)

10:59 AM Nov 08, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 95ஆவது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில், டெல்லியில் உள்ள எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு இன்று (08/11/2022) காலை 10.00 மணிக்கு திடீரென சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர், அவருடன் அமர்ந்து கலந்துரையாடினார். இந்த நிகழ்வின் போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் எல்.கே.அத்வானியின் குடும்பத்தினர் ஆகியோர் உடனிருந்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT