/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pmo323443.jpg)
குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது நாளாக வெற்றி பேரணியை நடத்தினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pmo323_0.jpg)
குஜராத் மாநிலம், காந்திநகர் மாவட்டத்தில் உள்ள தேகம் நகரில் இருந்து லாவட் கிராமத்தில் உள்ள ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகம் வரை இந்த வெற்றிப் பேரணி நடைபெற்றது. ராஜ்பவனில் இருந்து கார் மூலம் தேகம் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு திறந்த ஜீப்புக்கு மாறினார். அங்கிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்துக்கு அவருக்கு மக்கள் மலர்தூவி வரவேற்பளித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/narendra 43434.jpg)
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து காந்தி நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் வரை, கட்சிப் பேரணியை நடத்தினார். அதைத் தொடர்ந்து, காந்திநகரில் வசித்து வரும் தனது தாய் ஹீராபா இல்லத்திற்கு சென்ற பிரதமர், தனது தாயிடம் ஆசிப் பெற்றார். பின்னர், தாயுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.
பிரதமரின் இந்த வெற்றி பேரணிகள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்கான ஒரு தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)