Advertisment

ஜம்மு- காஷ்மீர் பேரவைத் தேர்தல்- பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை! (படங்கள்)

Advertisment

ஜம்மு- காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஜம்மு- காஷ்மீரில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் இன்று (24/06/2021) மாலை 04.00 மணிக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக, ஜம்மு- காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்துவது, மாநில அந்தஸ்து, மாநில வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

jammu and kashmir leaders PM NARENDRA MODI
இதையும் படியுங்கள்
Subscribe