முன்னாள் மத்திய நிதி துறை அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி. பாஜக கட்சியின் மூத்த தலைவரான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும் தீவிர அரசியலில் இருந்து ஓய்வில் இருந்தார்.

prime minister narendra modi and union ministers arrive at delhi aiims

Advertisment

Advertisment

அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அனுமதி. இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, தனது அமைச்சரவையில் அருண் ஜெட்லி இடம் பெற வேண்டுமென விரும்பினார். ஆனால் அருண் ஜெட்லி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

prime minister narendra modi and union ministers arrive at delhi aiims

அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தார். மேலும் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வருகை.