Prime Minister Modi's speech quoting Thirukural!

Advertisment

இன்று (21.06.2021) சர்வதேச யோகா தினம் என்பதால்,இந்தியா உட்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுதுணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் யோகாசனம் செய்தனர். டெல்லியில் உள்ள பல இடங்களில் மத்திய அமைச்சர்கள் தங்களது வீடுகளில் யோகாசனங்களை செய்துவருகின்றனர்.

இந்நிலையில், இன்றுஇந்திய பிரதமர் மோடி டெல்லியில் யோகா தின சிறப்புரையில் பேசினார். அப்பொழுது ''நோய்நாடி நோய்முதல் நாடி'' என்னும் திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி உரையாற்றினார்.

''நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர், ''ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன். கரோனா பேரிடர் காலத்தில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக யோகா திகழ்கிறது'' என பேசினார்.