Advertisment

“தலைசிறந்த தமிழ்ப் புலவர் திருவள்ளுவர்” - பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

Prime Minister Modi says The Greatest Tamil Poet Thiruvalluvar

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல்கொண்டாடப்பட்டும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்படவிருக்கிறது. அந்த வகையில்பொங்கல் தின விழாவையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இதனிடையே, மாட்டுப் பொங்கல் தினமான இன்று திருவள்ளுவர் தினமும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில்தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, காவி உடை அணிந்திருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்துகளைத்தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்துதமிழக முதல்வர், ‘வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது’ என்று குறிப்பிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்துகளைத்தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில்பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவர் தினத்துக்குத் தனது வாழ்த்துகளைத்தமிழ் மொழியில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது. காலத்தால் அழியாத அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது. நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

modi pongal thiruvalluvar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe