நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் இன்று (11.09.2024) நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதே சமயம் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

Advertisment

இது தொடர்பாகப் பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் பூஜையில் கலந்துகொண்டேன். விநாயகர் நம் அனைவரையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அற்புதமான ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிப்பாராக” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment