Prime Minister Modi meet President ramnath kovind

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் உக்ரைன் விவகாரம் குறித்து இருவரும் விவாதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்றுவரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவிவருகிறது. இதனால் அங்கு தங்கி கல்வி பயிலும் மற்றும் வேலை பார்க்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவருவதற்கான முயற்சியில் இந்தியா அரசு இறங்கியுள்ளது. இதற்காக நான்கு மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆபரேஷன் கங்கா மூலம் அவர்கள் தொடர்ச்சியாக இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.

Advertisment

இந்தச் சூழலில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பில், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் இந்தியர்களை மீட்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து குடியரசுத் தலைவரிடம் அவர் விளக்கியதாகக் கூறப்படுகிறது.