Prime Minister Modi does not follow god Ram says Subramanian Swamy

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட மொத்தம் 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

தென் மாநிலமான கர்நாடகா, தெலுங்கானாவிலிருந்து வரவழைக்கப்பட்ட கிரானைட் கற்களும், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மணல் கோவிலின் அடித்தள அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோவிலின் கட்டுமானத்தில் துளி அளவு கூட இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு காரணமாக, பொதுவாக இரும்பின் ஆயுட்காலம் 90 ஆண்டுகள் மட்டுமே; ஆனால் ராமர் கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கவும் எந்த வித இயற்கை பேரிடர்களிலும் பாதிப்பு ஏற்படாதவாறு உருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கட்டுமானத்தில் ஈடுபட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறகிறது.முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சீரஞ்சிவி, கத்ரீனா கைஃப்என இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் எனப் பலரும் தங்களது குடும்பத்தினருடன் இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்றுள்ளனர். அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு கோவில் கருவறையில்அவரது முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இந்த பூஜையில் பிரதமர் மோடியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகம் பகவத்தும் கலந்துகொண்டார்.அதன்பிறகுசிறப்பு பூஜைகளுடன் தற்போதுகுழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Advertisment

இதனிடையேபாஜக மூத்த நிர்வாகி சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “பிரதமர் அந்தஸ்து பூஜ்ஜியமாக இருக்கும் போது மோடிபிரதிஷ்டை பூஜையில் ஈடுபடுகிறார். அவர்தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பகவான் ராமரை பின்பற்றவில்லை. ராம ராஜ்ஜியத்தின் படி அவர் பிரதமராகவும் நடந்து கொள்ளவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.