Prime Minister Modi coming to Trichy!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்கும், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 38வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகிறார். இதன் காரணமாக திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், வெளிப்பகுதியில் மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் முதல் குழு கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருச்சி வந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு முதல் திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் வருகையின் போது, 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பிரதமர் மோடி திருச்சி வருகையின் போது திருச்சியில் 33,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது.

விமானநிலையத் திறப்புவிழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். விழாவில்பங்கேற்கதமிழக ஆளுநர் 1-ம் தேதி இரவுசென்னையில் இருந்துஇன்டிகோவிமானத்தில் திருச்சி செல்கிறார். தமிழக முதல்வர் 2-ம் தேதி காலை 8 மணியளவில் தனி விமானத்தில்சென்னையில் இருந்துதிருச்சி செல்கிறார். முதல்வருடன் டி.ஆர் பாலு,ஐ.ஏ.எஸ்அதிகாரிகளான முதல்வரின் செயலாளர்களானமுருகானந்தம், சண்முகம் ஆகியோர் செல்கின்றனர்.ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமல்லாமல், முதல்வரின் உதவியாளர் தினேஷ் மற்றும் நாகராஜ், செல்வராஜ்,சதிஷ்ஆகியோரும்பயணப்படுகின்றனர்.

Advertisment

பன்னாட்டு விமான நிலையம் திறப்பு விழா நிறைவடைந்தவுடன் பிற்பகல் மூன்று மணிக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள்திருச்சியில் இருந்துபுறப்பட்டு 3.45-க்குசென்னை வருகின்றனர். இவர்களுடன் அமைச்சர் நேரு மற்றும் திருநாவுக்கரசு ஐ.பிஎஸ்.ஆகியோரும்சென்னை வருகின்றனர். ஆளுநர் ரவி பிற்பகல் இரண்டுமணிக்குதிருச்சியில் இருந்துபுறப்பட்டு மூன்றுமணிக்குசென்னை வருகிறார்.