மத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரும், மத்திய அமைச்சர்களும் தனித்தனியாக அமர்ந்திருந்தனர்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான், ராம்விலாஸ் பாஸ்வான், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/narendra 777.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நாற்காலியில் அமர்ந்து ஆலோசித்தனர். கரோனாவைத் தடுக்க சமூக விலகல் அவசியம் எனக் கூறிய நிலையில் பிரதமர் இடைவெளி விட்டு ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us