Advertisment

 கேரளாவில் பிரதமர்  மோடி ஆலோசனை!

ம்

Advertisment

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இடுக்கி உள்பட எட்டு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை துணை ராணுவம், தீயணைப்பு துறை, போலீசார், வனத்துறை என அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்ட மக்களை படகு, கயிறு, டோலி மற்றும் ஹேலிகாப்டர் மூலமும் மீட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்கவைத்து வருகிறார்கள். இப்படி முகாம்களில் உள்ள மக்களுக்கு அரசு உதவிகளுடன் தமிழகத்திலிருந்தும் நிவாரண பொருட்களும், மருத்துவ குழுக்களும் சென்று பாதிப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து நிவாரண பொருட்களையும் வழங்கிவருகிறார்கள்.

ஆனால் கேரள உருவான காலத்திலிருந்து இப்படி ஒரு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதித்தது இல்லை. அதுனால மத்திய அரசும் தொடர்ந்து உதவி செய்து வருகிறது.

Advertisment

ம்

அதுபோல் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வெள்ளப் பகுதிகளை முதல்வருடன் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு விட்டு சென்றார்.

m

இந்த நிலையில் தான் பிரதமர் மோடியும் கேரளவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பகுதிகளை பார்வையிடுவதற்காக நேற்று திருவனந்தபுரம் வந்த மோடியை கவர்னரும், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் வரவேற்றனர். அதை தொடர்ந்து இன்று காலை முதல்வர் பினராயிவிஜயனுடன் அமைச்சர்கள் மற்றும அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசணை கூட்டம் நடத்தினார். அதை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டு விட்டு அதில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார் மோடி. இந்த நிலையில் தான் பிரதமர் மோடியும் கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு 500 கோடி நிவாரண நிதியும் வழங்கப் போவதாக அறிவித்து இருக்கிறார் அது போல் மற்ற மாநிலங்களிலிருந்தும் கேரளாவுக்கு நிவாரண உதவி கொடுக்கவும் தயாராகி வருகிறார்கள்.

modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe