Skip to main content

9 வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர்!

Published on 15/08/2022 | Edited on 15/08/2022

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் டெல்லியில் 9 வது முறையாக தேசியக் கோடியை பிரதமர் மோடி ஏற்றிவைத்தார். முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு டெல்லி செங்கோட்டைக்கு வந்த அவருக்கு முப்படை அணிவிப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட பிரதமர், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இன்று பிரதமர் மோடி நிகழ்த்தக்கூடிய உரையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கான முன்னோடி திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வருடம் சிறப்பு அழைப்பாளர்களாக அங்கன்வாடி பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்கள், பிணவறையில் பணி செய்யக்கூடிய பணியாளர்கள் உள்ளிட்ட சமுதாயத்தில் அதிகம் கவனிக்கப்படாதவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் வேண்டும்' - எழும் கோரிக்கை

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Mani Mandapam for Kodikatha Kumaran - the demand that arises

கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் வேண்டும் என கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று சமுதாய அமைப்பு அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் உள்ள மேலப்பாளையம் என்னும் கிராமத்தில் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக குமரன் பிறந்தார். இவருடைய இயற்பெயர் குமாரசாமி.

தன் குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாகப் பள்ளிப் படிப்பை ஆரம்பப் பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். பின்னர் அவர் கைத்தறி நெசவு தொழிலை செய்து வந்தனர். 1923ல் ராமாயி என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் மாற்று தொழில் தேடி திருப்பூர் சென்று அங்கு இருக்கும் ஈஞ்சையூரில் ஒரு மில்லில் எடை போடும் வேலையில் சேர்ந்தார்.

திருப்பூரில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய சிப்பாய்களால் அடிபட்டு கையில் இந்திய தேசியக் கொடியுடன் மயங்கி விழுந்து இறந்ததால் இவருக்கு கொடி காத்த குமரன் என்ற பெயர் வந்தது. இவருக்கு சென்னிமலையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக  சமுதாய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகிறது. இதுகுறித்து செங்குந்த மகாஜன சங்க தலைவர் நந்தகோபால் மற்றும் செயலாளர் ஆசை தம்பி ஆகியோர் கூறும்போது, "அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த கொடிகாத்த குமரனுக்கு மட்டும் அரங்கம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  தேச விடுதலைக்காகப் போராடிய கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் அவர் பிறந்த சென்னிமலையில் கட்ட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னிமலையில் விரைவில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.

Next Story

“தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா?” - சு.வெங்கடேசன் எம்.பி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Su Venkatesan MP crictized about pm modi to What you are giving to Tamil Nadu is only Thirukkural who pronounced mistakenly

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஐ.ஐ.எம், மின்சார ரயில் சேவை உள்ளிட்ட பல்லாயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று (20-02-24) திறந்து வைத்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்ததை தொடர்ந்து, மவுலானா பகுதியில் ஆசாத் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 32,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராஜ்கோட், மங்களகிரி (ஆந்திரா), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரப்பிரதேசம், கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய இடங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். 

227 ஏக்கர் பரப்பளவில், ரூ.1660 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மதுரை நாடாளுமன்ற எம்.பி.சு.வெங்கடேசன், பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “அடுத்த ஆறு நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார் பிரதமர் ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர. தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா?” என்று குறிப்பிட்டுள்ளார்.