Advertisment

பிரதமரின் விமானத்தை சோதனையிட்ட அதிகாரி குமுறல்!

ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. முகமது மோசின் அவர்கள் ஒடிஷா மாநிலத்தில் தேர்தல் பார்வையாளராக உள்ளார். கட்ந்த ஏப்ரல் 16 ஆம் தேதி , பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பயணம் செய்த விமானத்தை ஐ.ஏ.எஸ் அதிகாரி முகமது மோசின் சோதனை செய்தார். அவரின் இந்த செயலை கண்டித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இது குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்ததில் எனது பணியைத்தான் செய்தேன். சட்டத்துக்கு உட்பட்டு எனது பணியை நான் தொடர்ந்து செய்வேன் என்று கூறியுள்ளார்.

Advertisment

homsin

பிரதமரின் விமானம் எந்த இடத்தில் சோதனை செய்யப்பட்டது ?

ஏப்ரம் 16- ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒடிஷா மாநிலம் சம்பல்பூரில் வந்து இறங்கிய பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் விமானத்தை ஒடிஷா மாநில தேர்தல் பார்வையாளர் திரு. முகமது மோசின் அவர்கள் சோதனை செய்தார். இது தேர்தல் விதிமீறல் என்று கூறி அந்த அதிகாரியை இந்திய தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிட்டார் மோசின். அதனை விசாரித்த தீர்ப்பாயம் தேர்தல் ஆணைய உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. இந்த விவகாரம் குறித்து மோசின் பேசுகையில் "பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்தை " தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்களுக்கு உட்பட்டு வீடியோ எடுக்க சொன்னேன். இது என் கடமை. என் பணி. இதைச் செய்ததற்கு என் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து. தீர்ப்பாயத்தில் எனக்கு நியாயம் கிடைக்க போராடுவேன் என்று கூறினார்.

Advertisment

officers

இந்திய தேர்தல் ஆணையம் ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது ஏன் நடவடிக்கை ? என்பது தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளது. இதில் ஐ.ஏ.எஸ் அதிகாரி முகமது மோசின் பிரதமரின் சிறப்பு காவல் படை (எஸ்.பி.ஜி) வழிகாட்டுதல் படி மோசின் நடந்து கொள்ளவில்லை என தேர்தல் குற்றம் சாட்டியதாக மோசின் தெரிவித்துள்ளார். இப்படி தேர்தல் பார்வையாளராக இருக்கும் ஓர் அதிகாரி , சோதனை செய்வது விதிகளுக்கு புறம்பானது அல்ல என்று கூறப்படுகிறது. இதே கருத்தை வலியுறுத்தித்தான் ஐ.ஏ.எஸ் மோசின் அவர்களுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் ஐ.ஏ.எஸ் அதிகாரி கூறுகையில் நடவடிக்கை எடுக்கும் முன்னர் எஸ்.பி.ஜி அதிகாரிகளிடம் கேட்டேன். பிறகு தான் சோதனை செய்தேன் என்று அதிகாரி மோசின் கூறுகிறார். கடந்த வியாழக்கிழமை ஐ.ஏ.எஸ் அதிகாரி மோசின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம் , 'எஸ்.பி.ஜி பாதுகாப்பு படையினருக்கு உரிமையளிக்க அதிகாரம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதே போல் கர்நாடகா முதல்வர் குமாரசாமி , ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் சென்ற தனி விமானத்தில் கூடத்தான் சில நாட்களுக்கு முன் சோதனை செய்யப்பட்டது என விளக்கம் அளித்தது. மேலும் மோசின் கூறுகையில் "நான் 22 ஆண்டு காலம் அனுபவம் உள்ள அதிகாரி" .நான் எந்த கட்சியை சார்ந்தவனும் அல்ல. சட்டப்படி எதையும் எதிர்கொள்வேன் என்று முடிவாக கூறினார் மோசின்.

பி.சந்தோஷ், சேலம்.

election campaign helicopter prime minister
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe