meeru sp

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், டியூஷன் சென்று திரும்பிய 10 ஆம் வகுப்பு மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனைத் தனது பெற்றோரிடம் கூறிஅழுத அந்தச் சிறுமி, விஷம் சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்பு மாணவி எழுதிய கடித்ததில், லக்கன் என்பவர், அவரது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிட்டு இருந்தார்.

Advertisment

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படியில், உத்தரப்பிரதேச போலீஸார் லக்கன் மற்றும் அவரது நண்பன்விகாஷ்ஆகியோரைகைது செய்தனர். மேலும் லக்கனின்இரண்டு நண்பர்களைத் தேடி வந்தனர்.

Advertisment

இந்தநிலையில், கைது செய்யப்பட்டகுற்றவாளிகளைநீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது,லக்கன் தப்பியோட முயன்றுள்ளான். அப்போது, போலீஸாரை நோக்கிதுப்பாக்கியால் சுட்டுள்ளான். இதனைத் தொடர்ந்து போலீஸார் திரும்பச் சுட்டதில் லக்கன் காலில் குண்டு பாய்ந்துள்ளது. இதனையடுத்துஅவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூடுசம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மீரட் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.