Advertisment

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்... முக்கியக் குற்றவாளி கைது!

godhra

Advertisment

அயோத்தியில் பாபர்மசூதி இடிப்புச் சம்பவத்தின் தொடர்ச்சியாக,கோத்ராவில்சபர்மதி அதிவிரைவுரயில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.இதில் ரயிலுக்குள் இருந்த 57 பேர் தீயில் கருகி இறந்தனர். அதில் 14 குழந்தைகள், 27 பெண்கள் அடக்கம். இதனையடுத்து குஜராத் மாநிலத்தில் பெரும் கலவரம்மூண்டது. இக்கலவரத்தில்790 முஸ்லிம்களும், 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர் என்கிறது அரசு அறிவிப்பு. ஆனால், இந்த கலவரத்தில் பலியானவர்கள் இதைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றனர் சமூக ஆர்வலர்கள்.

இந்தநிலையில், கோத்ராரயில்எரிப்புச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான ரபிக் பாதுக், சம்பவம்நடந்து 19 வருடங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். ரபிக் பாதுக்மேலும் சிலரோடு சேர்ந்துரயிலில் பெட்ரோலைஊற்ற, இன்னொருநபர் தீ வைத்துள்ளார். ரயிலைகொளுத்திய சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டபிறகு, கோத்ராவில் இருந்து தப்பித்து, டெல்லிஉள்ளிட்ட வெளிமாநிலங்களில் சிலகாலம் தங்கியிருந்த ரபிக் பாதுக், மீண்டும் குஜராத் திரும்பியுள்ளார்.

குஜராத் திரும்பியபிறகு, முன்பு வசித்தபகுதியைவிட்டுவிட்டு வேறுபகுதியில் வாழத்தொடங்கிய ரபிக் பாதுக், பழங்களைவிற்று வாழ்ந்து வந்துள்ளார்.இந்தநிலையில் தற்போது அவர் குஜராத் மாநிலகாவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில்மூன்று முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டியதுள்ளதாகக் கூறப்படுகிறது.

Gujarat babri masjid (9733 godhra bjp
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe