Priests break dance during temple festival in andhra pradesh

கோயில் ஊர்வலத்தின் போது அர்ச்சகர்கள் பிரேக் டான்ஸ் ஆடிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், மந்தாசா கிராமத்தில் ஸ்ரீ வாசுதேவ பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில், கடந்த 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 16அது பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்றது.

Advertisment

திருவிழாவின் ஒரு பகுதியில், பாரம்பரிய பாடல்கள் மற்றும் பக்தி இசையுடன் தேர் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் போது, பெருமாள் சிலையை சுமந்து சென்ற அர்ச்சகர்கள், திடீரென பாடல்களுக்கு நடனமாடினர். மேலும், சில அர்ச்சகர்கள் பிரேக் டான்ஸ் ஆடினர். இதனை கண்ட சுற்றியிருந்த பக்தர்கள், அவர்களை ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, கலவையான விமர்சனங்களைப் பெற்றன. மதக் கொண்டாட்டங்களை மேலும் ஈர்க்கக்கூடியதாக இந்த டான்ஸ் உள்ளது என்றும், கோயில் மரபுகளுக்கு அர்ச்சகர்கள் அவமரியாதை செய்துவிட்டனர் என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

Advertisment