Skip to main content

17 மாதங்களில் இல்லாத அளவுக்கு புதிய உச்சம்தொட்ட விலைவாசி உயர்வு!

Published on 13/04/2022 | Edited on 13/04/2022

 

Price peaks at 17 months!

 

நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் 17 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. 

 

கடந்த மார்ச் மாதத்திற்கான விலைவாசி புள்ளி விவரங்களை மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மார்ச்சில் சில்லறை விலை பணவீக்கம் 6.95% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 17 மாதங்களில் இல்லாத உயர்ந்த அளவாகும். சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்ததே பணவீக்க அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக, கூறப்படுகிறது. 

 

பணவீக்கம் சமையல் எண்ணெய் பிரிவில் 18.8% ஆகவும், காய்கறிகள் பிரிவில் 11.6% ஆகவும் இருந்தது. இறைச்சி மற்றும் காய்கறிகள் பிரிவில் பணவீக்கம் 9.6% ஆகவும், உடைகள் மற்றும் காலணிகள் பிரிவில் 9.4% ஆகவும் இருந்தது. மேலும், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் பணவீக்கம் 8% ஆகவும், சுகாதாரப் பிரிவில் 7% ஆகவும் உயர்ந்துள்ளது. 

 

கிராமப் புறங்களில் சில்லறை விலை பணவீக்கம் 7.7% ஆக இருந்த நிலையில், நகர்ப்புறங்களில் அது 6.1% மட்டுமே இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. பணவீக்கம் வெகுவாக அதிகரித்துள்ளதால், நிலைமையைச் சமாளிக்க வங்கிக் கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தும் எனத் தெரிகிறது.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இந்தியா எதிரி நாடுதான் இருந்தாலும்...” - பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர்

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Pakistan Opposition Leader says Though India is an enemy country

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்றது. கடைசிக் கட்டமாக ஜூன் 1ஆம் தேதி நடைபெற்று, முடிவுகள் ஜூன் 4ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டன. அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது, தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவர் சையத் ஷிப்லி ஃபராஸ், சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலை இந்தியா சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தியதற்காகப் பாராட்டியதோடு, தனது நாட்டிலும் இதேபோன்ற செயல்முறையை நடத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் செனட்டில் பேசிய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர் சையத் ஷிப்லி ஃபராஸ், “எதிரி நாட்டின் உதாரணத்தை நான் மேற்கோள் காட்ட விரும்பவில்லை. இருந்தாலும் சமீபத்தில், அங்கு (இந்தியா) தேர்தல்கள் நடத்தப்பட்டன.  800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்தனர். ஆயிரக்கணக்கான மற்றும் லட்சக்கணக்கான வாக்குச் சாவடிகள் இருந்தன. சில வாக்குச் சாவடிகள் ஒரு இடத்தில் ஒரு வாக்காளருக்காகவும் அமைக்கப்பட்டன. ஒரு மாத காலப் பயிற்சி முழுவதும் இ.வி.எம்கள் மூலம் நடத்தப்பட்டது. மக்களவைத் தேர்தலில் முறைகேடு நடந்ததா என்று இந்தியாவில் இருந்து ஒரு குரல் கூட கேட்கவில்லை. 

எவ்வளவு சீராக மின்சாரம் பரிமாறப்பட்டது. நாமும் அதே நிலையில் இருக்க விரும்புகிறோம். இந்த நாடு சட்ட உரிமைக்காகப் போராடி வருகிறது. இங்கே, வாக்கெடுப்பில் தோற்றவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மேலும் வெற்றியாளரும் அவரது சொந்த விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இப்படியான அணுகுமுறை நமது அரசியல் அமைப்பை வெறுமையாக்கியுள்ளது” என்று கூறினார். 

Next Story

'மாற்றமில்லை...' - ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கொடுத்த அப்டேட்

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
'No change in repo interest rate' - Reserve Bank of India announcement

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதன் கவர்னர் சக்தி காந்ததாஸ், 'பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது. இதனால் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும்' என அறிவித்துள்ளார்.

பணவீக்கம் இன்னும் கட்டுக்குள் வராத நிலை உள்ளது. நான்கு சதவீதத்திற்கு கீழ் பணவீக்கம் இருக்க வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி இலக்காக வைத்திருக்கும் நிலையில் விலைவாசி உயர்வைக் குறிக்கும் பணவீக்கம் அதிகமாக இருக்கும் பொழுது கடன்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படமாட்டாது. அதேநேரம் வட்டி விகிதத்தை குறைக்கவும் முடியாது. எனவே ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது மட்டுமல்ல கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் இருந்தே மாற்றமில்லாமல் இதேநிலை தொடர்வது குறிப்பிடத்தகுந்தது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகன மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி உயர வாய்ப்பில்லை எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.