வருகின்ற16 ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசிசெலுத்தும் பணி தொடங்கும்எனமத்திய அரசு அறிவித்திருந்தது.
கரோனாதடுப்பூசி செலுத்துவதில்,முன்களப் பணியாளர்களுக்கும், 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, அதன்பிறகு 50 வயதிற்குக் கீழுள்ள, இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனாதடுப்பூசிசெலுத்தப்படும் எனவும்மத்திய அரசுதெரிவித்திருந்தது.இதற்காகசீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டுதடுப்பூசிகளை மத்திய அரசு தற்பொழுதுகொள்முதல் செய்துள்ளது. அதேபோல் பாரத் பையோ டெக் நிறுவனத்தின் கோவாக்சீன் தடுப்பூசியும் கொள்முதல் செய்யப்படும் எனவும்தகவல்கள் வெளியாகியுள்ளது.இன்றுகரோனா தடுப்பூசிசெலுத்தும் திட்டம் தொடர்பாகபிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலிவாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் இந்தியாவில்200 ரூபாய்க்கு சீரம்இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் 'கோவிஷீல்டு' தடுப்பூசிகிடைக்கும் எனஅந்நிறுவனம் தெரிவித்துள்ளது.