Prevention of monkeypox - the central government released regulations!

Advertisment

இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், குரங்கம்மை நோய்த் தடுப்புக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, குரங்கம்மை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை முதலில் தனிமைப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் அருகில் சென்றால் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும். கைகளை சோப்பு அல்லது சானிடைசர் வைத்து சுத்தப்படுத்த வேண்டும்.

குரங்கம்மை அறிகுறிகள் தெரிந்தால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய உடைகளை, குரங்கம்மை நோய்த்தொற்றால் பாதிக்கப்படாதவர்களின்துணிகளுடன் சேர்த்து, சலவைச் செய்யக்கூடாது.

Advertisment

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் துண்டு, பெட்ஷீட் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.