Advertisment

ஹெல்மெட் போட்டுகொண்டு பாஜக தலைவரை பேட்டியெடுத்த பத்திரிக்கையாளர்கள்...காரணம்....

gfbgfbgf

Advertisment

சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரில் பாஜக தலைவர் ராஜீவ் அகர்வாலை பேட்டி எடுக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் ஹெல்மெட் அணிந்தபடி அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். அப்படி அவர்கள் கேள்விகேட்டபுகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஞாயிறு அன்று பாஜக தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தை அங்குள்ள உள்ளூர் செய்தியாளர் சுமன் பாண்டே வீடியோ எடுத்துள்ளார். அப்போது பாஜக செயல்பாடு குறித்து அவர் கேள்வி கேட்ட போது அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு அவரை ராஜீவ் அகர்வால் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ராஜீவ் அகர்வாலின் இந்த செயலை எதிர்த்து பத்திரிகையாளர்கள் பாஜக அலுவலகம் முன்போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர் அந்த பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்டார். இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் செய்தியாளர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேட்டியெடுக்கும்போது ஹெல்மெட் அணிந்து கொண்டனர். அவர்கள் அப்படி செய்த இந்த விஷயம் தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

press
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe