Advertisment

குடியரசுத் தலைவர் தேர்தல்... பிரதமர் மோடி வாக்களிப்பு!

Presidential Election... Prime Minister Modi Voting!

Advertisment

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24- ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று (18/07/2022) நடைபெற்று வருகிறது. ஆளும் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவும், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

இன்று வாக்குப்பதிவுக்காக, டெல்லியில் உள்ள நாடாளுமன்றம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்றங்களிலும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய உள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் பிரதமர் மோடிஉள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

modi Parliament President vote
இதையும் படியுங்கள்
Subscribe