Advertisment

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

president ramnath kovind shifted to delhi aiims

Advertisment

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு நேற்று (26.03.2021) காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரை மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இதனையடுத்து, மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத்தலைவரின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குடியரசுத்தலைவரின் உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் குறித்து அவரது மகனிடம், பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அதேபோல, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று உடல்நலம் குறித்துகேட்டறிந்தார்.

AIIMS hospital Ramnath kovind
இதையும் படியுங்கள்
Subscribe