Skip to main content

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

president ramnath kovind shifted to delhi aiims

 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு நேற்று (26.03.2021) காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரை மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இதனையடுத்து, மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத்தலைவரின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

 

குடியரசுத்தலைவரின் உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் குறித்து அவரது மகனிடம், பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அதேபோல, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜம்முவில் எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு!

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Pm modi opens AIIMS Hospital in Jammu

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஐ.ஐ.எம், மின்சார ரயில் சேவை உள்ளிட்ட பல்லாயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று (20-02-24) திறந்து வைக்கிறார். 

எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்ததை தொடர்ந்து, மவுலானா பகுதியில் ஆசாத் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 32,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதனை தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராஜ்கோட், மங்களகிரி (ஆந்திரா), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரப்பிரதேசம், கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய இடங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். 

ஜம்மு காஷ்மீரில், பிரதமர் வருகையையொட்டி, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 227 ஏக்கர் பரப்பளவில், ரூ.1660 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ - ராம்நாத் கோவிந்த் ஆலோசனை

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

One country one election Ram Nath Kovind meeting

 

பல வருடங்களாகவே 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற கூற்றை மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

அதனைத் தொடர்ந்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட உறுப்பினர்களை நியமித்து அண்மையில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதே சமயம் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

 

இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 23) ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் உள்ள ஜோத்பூர் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குலாம் நபி ஆசாத் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.