/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramnath govindh.jpg)
நேற்று கேரளாவை சேர்ந்த அர்ச்சகர் ஒருவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கொலை மிரட்டலைவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இவர் காவல் கட்டுப்பாடு அறையை தொடர்புகொண்டு, குடியரசுத்தலைவர் திங்கள்கிழமை சென்ட் தாமஸ் கல்லுரிக்கு வரும்பொழுது குண்டுவைத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
காவலர்கள் அழைபேசியை ட்ரேஸ் செய்து பின்னர் அவரை கைது செய்தனர். ஜெயராமன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு முழு மதுபோதையில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். காலையில் விழித்தவுடன் கட்டுப்பாடு அறைக்கு பேசியதையே அவர் மறந்துவிட்டதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மூன்றுநாள் பயணமாக கேரளா திருவனந்தபுரத்துக்கு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us