Advertisment

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிவு உபசார விழா!  

President Ram Nath Kovind's Members of Parliament's Court Ceremony!

Advertisment

இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர்ராம்நாத்கோவிந்தின்பதவிக்காலம் நாளையுடன் (24/07/2022) நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், நாட்டின் 15வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெற்ற நிலையில், முடிவுகள் ஜூலை 21- ஆம் தேதி அன்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதிமுர்முஅபார வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (23/07/2022) மாலை 05.00 மணிக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில், குடியரசுத் தலைவர்ராம்நாத்கோவிந்துக்குபிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் பிரியாவிடை அளித்தனர். குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாஉள்ளிட்டோர் விழாவில்கலந்துக்கொண்டனர்.

விழாவில் பேசிய குடியரசுத் தலைவர்ராம்நாத்கோவிந்த், "நாட்டுக்குசேவையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. நாட்டுக்கு எனது சிறப்பானவற்றைக் கொடுக்க முயற்சியை மேற்கொண்டேன்.கரோனாபெருந்தொற்றைஎதிர்த்து நாடுசிறப்பாகசெயல்பட்டது. திரௌபதிமுர்முபெண்கள் அனைவருக்கும்முன்மாதிரியாகதிகழ்கிறார். நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்.எனக்குகிடைத்த நினைவுகள் அனைத்தையும் பொக்கிஷமாகப் பாதுகாப்பேன். சர்வதேச பருவநிலை செயல்பாடுகளில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நாம் உயர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதைத் தொடர்ந்து, மையமண்டபத்தில் இருந்தநாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு அருகில் சென்ற குடியரசுத் தலைவர்ராம்நாத்கோவிந்த்கையெடுத்துகும்பிட்டுதனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Delhi Parliament
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe